பிட்காயின் பரிவர்த்தனை செய்வதற்காக அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வருடங்களாக, பிட்காயின் என்ற ‘டிஜிட்டல் கரன்சி’ அல்லது, ‘கிரிப்டோ கரன்சி’ எனும், கணினி வழியான பணப் பரிமாற்றம் பிரபலம் அடைந்து வருகின்றன. இத்தகைய டிஜிட்டல் நாணயங்களுக்கென்று தனி மையங்கள், உலகம் முழுவதும் செயல்படுகின்றன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களும், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும், பிட் காயின் முறையில் ஈடுபட்ட்டுள்ளதாக கூறப்படுகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அடுத்த அதிபராக வருவார் என எதிர்பார்க்கும் இந்த நேரத்தில், தொழிலதிபர்களான, எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ், வாரன் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் நேற்று ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியில் பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பலுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களை தவிர முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா, ஆப்பிள், உபேர் ஆகிய நிறுவனங்களினுடைய டுவிட்டர் கணக்குகளும், ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பல் தற்போது சமூக வலைதளமான டுவிட்டர் கணக்கினுள் எப்படி நுழைந்தது என்பது பற்றிய விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறலானது என கண்டனம் எழுந்திருக்கிறது.