Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு… தானும் தற்கொலை செய்த கணவன்… இந்த விபரீத முடிவுக்கு காரணம்?

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அமோல் நேற்று தனது 2 மகன்களையும் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த போது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்த அமோல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் வருகையில் நான்கு பேரின் சடலம் வரிசையாக இருந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் அனுப்பப்பட்டதோடு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லையால் அமோல் இந்த முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. அன்பு நிறைந்த அழகான குடும்பம் முழுவதுமாக அழிந்து போனது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |