Categories
உலக செய்திகள்

மசூதில் நுழைந்த பயங்கரவாதிகள் …. திடீர் தாக்குதலால் 4 பேர் பலி…!!

மசூதில் நுழைந்து தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போர் ஆனது தற்போதைய நிலையில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இப்போரில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் காவல்துறையினரையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணம் பர்யாப்பின் தலைநகரான மாயம்னாவில் இருக்கின்ற மசூதியில் உள்ளூறை சார்ந்த முஸ்லிம்கள் நேற்று மதியம் தொழுகையில் ஈடுபட்டனர். அந்நிலையில் சட்டென்று மசூதியின் உட்புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்குள்ளவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியை கொண்டு சுட்டெறிந்தனர். மசூதியில் இருந்த அனைவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் அங்கு மிகுந்த பதற்றமான நிலையும் பீதியும் உருவாகியது. இருந்தாலும் துப்பாக்கி சூட்டால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பயங்கரவாதிகள் 2 பேரையும் மசூதியிலையே சுட்டுக் கொன்று விட்டனர். இத்தகைய தாக்குதலுக்கான பொறுப்பை எவ்வித பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. எனவே தலீபான் பயங்கரவாத இயக்கம் தான் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக மயாம்னா நகரத்தின் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |