Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பெற்ற குழந்தையுடன் பிச்சை எடுத்த தாய்… உடனடியாக மீட்ட அதிகாரிகள்..!!

பெற்ற பிள்ளையை பிச்சை எடுக்க வைத்த தாயையும் குழந்தையையும்    காவல்துறையினர்  திருத்தணி குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் அளித்த பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருடைய, உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது திருத்தணி பைபாஸ் சாலையில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை வைத்து பிச்சை எடுத்ததை நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதனை ஏற்காத அந்தப் பெண் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த திருத்தணி போலீசார், அந்தப் பெண்ணிடம் எடுத்துக்கூறி சமாதானம் செய்து பேசி குழந்தை மற்றும் தாயை திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திற்கு  அனுப்பிவைத்துள்ளனர்.

Categories

Tech |