கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பீகாரில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில், ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகள் இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுலில் இருக்கிறது.
இந்த வரிசையில் தற்போது பீகார் மாநிலம் இடம்பெற்றுள்ளது. அங்கே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 853 ஆகவும், பலி எண்ணிக்கை 160 ஆகவும் அதிகரித்த நிலையில், பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகள் நீக்கப்பட்டு நாளை முதல் ஜூலை 31ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும், மத வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட வேண்டும் எனவும் அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அறிவித்துள்ளார்.