Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருமணம் செய்துகொள்கிறேன்”… சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம் அருகே திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 26 வயதுடைய இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார்.. இந்தநிலையில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று கடந்த 12 ஆம் தேதி மாலை அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுமி கிடைக்காததால், நேற்று முன்தினம் காலை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் இரவு மணிகண்டனை கைது செய்து, சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Categories

Tech |