Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் செய்யவில்லை…. எங்களிடம் அதிக வரி வசூலிக்கலாம்…. அரசிடம் கோரிக்கை வைத்த நல்லுள்ளங்கள்…!!

கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக நிதி உதவி செய்ய, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை .

டிம் டிஸ்னி, மேரி போர்டு போன்ற பெரும்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ” நாங்கள், நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவும் வழங்கவில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொரோனா வைரஸ், 50 கோடி மக்களை வறுமையில் வாட்டியுள்ளது. வியாபாரம்,தொழில் இல்லாததால், கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. ஏற்கனவே, 100 கோடி குழந்தைகள், பள்ளிக்குப் போக முடியாமல் இருக்கின்றனர். மருத்துவமனைகளில், படுக்கைகள், பாதுகாப்பு உடுப்புகள், முக கவசங்கள், செயற்கை சுவாசத்திற்கு உதவும், ‘வென்டிலேட்டர்’ போன்ற கருவிகள் பற்றாக்குறையாக உள்ளது. பொது சுகாதார கட்டமைப்பை நிலைநிறுத்த, போதிய முதலீடு இல்லை.

இரவு, பகல் பாராமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோருக்கும், நாம் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம். அவர்களை போல,மிக முக்கிய பணிகளில் உள்ளவர்களுக்கு, மிகக் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. வேலை இழப்பு, வீட்டை பேண முடியாத நிலை கவலைகள், எங்களுக்கு இல்லை. அதனால், எங்களுக்கு வரி விதியுங்கள். இது ஒன்றே வழி. வலிமையுள்ளவர்கள் தான் சுமையை சுமக்க வேண்டும். எங்களுக்கு பணத்தை விட, மனிதநேயம் தான் முக்கியம்”, இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பிரிட்டன் அரசு, பெருங்கோடீஸ்வரர்களுக்கு செல்வ வரி விதிப்பது பற்றி பரிசீலித்து வருகின்றது .

Categories

Tech |