தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37,648 ரூபாய்க்கு விற்பனையாகிறது