சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து சேர்த்துள்ளார்.
பின் மூதாட்டி அங்கே தங்க முயன்றபோது, முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் பழ கடை உரிமையாளர் சென்றதும், ஒரு வேனில் மூதாட்டியை சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் நடு சாலையில் இறக்கிவிட்டு தவிக்க விட்டுச் சென்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மூதாட்டியிடம் விசாரிக்க, அவர் நடந்தவற்றையெல்லாம் கூறியுள்ளார். பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவர்களும் கலைந்து சென்றுவிட்டனர். 60 வயது மூதாட்டியை பராமரித்து பாதுகாக்க கூடிய முதியோர் இல்லமே இப்படி செய்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.