Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டு வாசலில்… கட்டிலில் படுத்துகிடந்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… விரட்டிப்பிடித்த மக்கள்!!

இந்நிலையில் தான் நேற்று முன் தினம் முனியசாமி மதுபோதையில் வெங்கடாசலபதியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டினார் முனியசாமி. இதனால் வெங்கடாசலபதி அலறினார்.. இந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் வேகமாக வெளியே ஓடி வந்து முனியசாமியை தடுக்க, அவர்களுக்கும் கையில் பலத்த  வெட்டுக் காயம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.. இந்த சத்தம் கேட்டு உடனே அக்கம், பக்கத்தினர் வேகமாக ஓடி வந்து முனியசாமியை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் சுபகுமார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  இதனிடையே காயமடைந்த மனைவி மற்றும் மகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |