Categories
தேசிய செய்திகள்

ஏன் மறுக்கிறாய்?… கெஞ்சிக்கேட்ட காதலி… முடியாது என சொன்னதால் எடுத்த சோக முடிவு… கதறும் பெற்றோர்..!!

ஆந்திராவில் காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர்  அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்..

உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் கொண்டுள்ளார்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு ரம்யா ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று தொடர்ந்து கெஞ்சி கேட்டது மட்டுமில்லாமல், நண்பர்கள் மூலமாகவும் பேச முயன்றுள்ளார்.

இப்படி தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. ஒருகட்டத்தில் சிவபார்கவி பேச மறுத்ததால், விரக்தியில் இருந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தனது அறைக்குள் துப்பட்டாவை கழுத்தில் மாட்டிகொண்டு அதனை வீடியோ எடுத்து, காதலனுக்கு அனுப்பி ஒருநிமிடம் மட்டும் தன்னிடம் பேசுமாறு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.. ஆனால் காதலனிடம் இருந்து எந்த ரீபிளேயும் வராததால் நேரலையில் வீடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய அறைக்குள் சென்ற மகள் ரம்யா நீண்டநேரமாகியும் வெளியே வராத காரணத்தால் பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர்.. இருப்பினும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரம்யா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ரம்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில், சில வீடியோவும், காதலனுக்கு ரம்யா அனுப்பிய மெசேஜ்களும் இருந்ததால், வழக்குப்பதிவு செய்து சிவபார்கவிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |