நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்த நிலையில் தற்போது 1761 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 37 பேர் மாநகர பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 804 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டத்தில் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.