Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வுக்கு வாய்ப்பில்லை…. முடிவெடுக்க அனுமதி தாங்க…. தமிழக முதல்வர் கடிதம்…!!

செப்டம்பர் மாத இறுதிக்குள்  செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் கால சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களின் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இச்சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வெளியே வந்தால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குரியாகிறது.

எனவே மத்திய அரசு நிர்ணயித்த செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நடத்துவது என்பது முடியாத காரியம். அப்படிப்பட்ட சூழல் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது . எனவே செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் உரிமையை அளிக்குமாறு வலியுறுத்தி அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |