Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நுழைவு தேர்வு கிடையாது” மார்க் வந்ததும் இதை செய்யுங்க…. பல்கலைக்கழகம் அறிவுரை….!!

மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என வேலூர் விஐடி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், கடந்த வருடம் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்த பல்கலைக் கழகங்களால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை.

அந்த வகையில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் நுழைவுத்தேர்வு கிடையாது எனவும், பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் மதிப்பெண் முடிவுகள் வெளியானதும் அதனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான இணையத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து அப்ளை செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |