Categories
உலக செய்திகள்

தலைமை ஆசிரியர் இப்படி பண்ணலாமா… ஹோட்டலுக்கு வாங்க.. பெற்றோரை அழைத்த மாணவி… பின் அவர்கள் கண்ட அதிர்ச்சி..!!

பிரிவு உபசரணை காக தலைமையாசிரியர் மாணவிகளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சுவிட்சர்லாந்தில் மாணவி ஒருவர் தான் உணவகத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கூறி தனது பெற்றோரை அழைத்துள்ளார். இதனால் பதறியடித்துக்கொண்டு உணவகத்திற்கு சென்ற பெற்றோர் அங்கு கண்ட காட்சி அவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 15, 16 வயதே ஆன மாணவிகள் அதிக அளவு மதுபானம் அருந்தி போதையில் இருந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடக்கின்றனர்.

மதுபானம் அருந்துவதற்கான வயதை அடையாத மாணவிகள் அதிகளவு போதையை ஏற்படுத்தும் மதுபானங்களை அருந்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரிக்கையில் sant gallen-ல்  உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரான பாஸ்கல் பிரிவு அனுசரிப்பு நிகழ்ச்சிக்காக தனது மாணவிகளுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தலைமையாசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவிக்க இல்லை.

Categories

Tech |