Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை

ட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 15ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ட்ரூகாலர் நிர்வாகத்தின் சார்பாக  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் 89 செயலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் ட்ரூ காலர் இருப்பது மிகவும் வருதத்தை தருகிறது.  ஸ்வீ டன் நாட்டால்  உருவாக்கப்பட்ட ட்ருகாலர் செயலியை இந்தியாவை தன்னுடைய தாய் நாடாகவே நினைக்கின்றது.ட்ரூ காலர் ஸ்டாக்ஹோமை முதன்மையாக கொண்ட, ஸ்பேம் கண்டறிதல் அழைப்பாளர் ஐடி மற்றும் செய்தி அனுப்புதல் போன்ற பலவற்றை பயனாளர்களுக்கு தொகுத்து வழங்குகிறது.

ட்ரு காலர் செயலி நமது குடிமக்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பானது என்பதை விரைவில் மீண்டும் உணரவைப்போம். ராணுவத்தில் தடைசெய்யப்பட்ட செயலிகளில் ட்ரு காலர் இடம் பெற்றுள்ளதற்கான காரணம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. எனவே இதற்கான விசாரணை நடத்த நாங்கள் கோரிக்கை வைப்போம்.இந்தியாவில் ட்ரூ காலர் 170 மில்லியனுக்கு அதிகமான   பயனாளர்களுக்கு சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ட்ரூ காலர் தடை செய்யப்பட்டிருப்பது நியாயமற்றதாகவே கருதப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |