Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனக்குழப்பம் ஏற்படும்…பயம் விலகி செல்லும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   சிலருக்கு கோபம் ஏற்பட நேரலாம், பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது ரொம்ப நல்லது. தொழில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். வாழ்க்கை துணை அனுகூலமாக இருப்பார்கள். மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது ரொம்ப நல்லது.

மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்வது நல்லது. மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் நிதானம் இருந்தால் போதுமானது. அக்கம் பக்கத்தில் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தேவையற்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.

காதலர்களுக்கும் தேவையில்லாத மனக்குழப்பம் இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |