Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா…? இது இரண்டும் குடிங்க..!!

இன்றைய காலகட்டங்களில் தைராய்டு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.

கழுத்து பகுதியில் என்டோகிரைன் என்ற சுரப்பியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக தைராய்டு உருவாகிறது. இந்த தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் வேலை மெட்டபாலிஸ் அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமல் தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த தைராய்டு பிரச்சினையில் இருந்து விடுபட இயற்கை முறையில் இரண்டு வகையான பானங்களை குறித்து இங்கே காண்போம்.

1. எலுமிச்சைச்சாறு

ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமாக சூடு ஏற்றி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை காலை உணவு உட்கொண்ட பிறகும்  மதியநேரம் உணவிற்குப் பின்பும் குடித்துவந்தால் நன்மை பிறக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

2. செலரி ஜூஸ்

ஒரு கட்டு செலரிகளை எடுத்து நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து பின்பு அதை வடிகட்டி தினமும் குடித்து வர வேண்டும். முக்கியமாக இந்த பானத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைய உள்ளது மேலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கழுத்தில் உள்ளே வீக்கத்தை குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

Categories

Tech |