Categories
அரசியல்

“கொரோனா பரவல்” சிக்னல்களில் கட்டுப்பாடு…. இனி 60 நொடி மட்டுமே….!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக சிக்னல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதனால் நகரங்களில் இருக்கக்கூடிய சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் சகஜமாக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், செயல்படாமல் இருந்த சிக்னல்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சிக்னலில் நெரிசல் உடன் வாகன ஓட்டுநர்கள் நிற்கும் போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால், அவர்களை நீண்ட நேரம் சிக்னலில் காத்திருப்பில் வைக்காமல், விரைவாக நகர செய்ய சிக்னல் நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே சிக்னல் விழுந்தாலும் சிக்னலில் காத்திருக்கும் கூடிய நேரம் 60 நொடி மட்டுமே. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிக்னலில் நிற்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் முக கவசத்தை இறக்கி விடுவது, முக கவசத்தை கழட்டி மாட்டுவது உள்ளிட்ட செயல்களை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |