2020ல் வெளியாகி அதிக லாபத்தை ஈட்டிய வெற்றியை கொடுத்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது
இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதத்தின் தொடக்கதோடு படங்கள் வெளிவருவது நின்று போனது. அதுவரை 47 படங்கள் மட்டுமே திரைக்கு வந்தது. தொற்று பரவத் தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சில படங்கள் OTT தளத்தில் வெளியாகத் தொடங்கியது.
அவ்வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெண்குயின் படமும் இத்தளத்திலேயே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு வெளியான படங்களில் லாபத்தை ஈட்டி எத்தனை படங்கள் வெற்றியை கொடுத்தது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அவை,
- திரௌபதி
- சைக்கோ
- பட்டாஸ்
- ஓ மை கடவுளே
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்