காற்றில் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்தும், அது பரவக்கூடிய தன்மை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் பல தகவல்கள் கொரோனா குறித்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் 232 நாடுகள் சேர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், காற்றில் உள்ள சிறு துகள்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது.
இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம், அதை ஒப்புக்கொண்டு காற்றில் உள்ள துகள்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. உலக சுகாதார நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்ததையடுத்து மக்கள் அனைவரும் முன்பை காட்டிலும் மிகுந்த அச்சமடைய ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து இந்தியாவில் பல நிபுணர்கள் மக்களை நீதான படுத்த தொடர்ந்து விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா காற்றில் உள்ள சிறு துகள்கள் மூலம் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆனால் காற்று இருக்கும் அனைத்து இடங்களிலும் கொரோனா இருக்குமென மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருக்கும் இடங்களில், அவர் தும்பும் போதோ அல்லது இரும்பும் போதோ அது காற்றில் ஒரு சில தூரம் சிறு துகள்கள் மூலம் கொரோனா பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் இடங்களில் அது வீடாக இருந்தாலும் சரி, அங்குள்ளவர்கள் கட்டாயம் ஐந்தடுக்கு லேயர் கொண்ட முக கவசங்களை அணிந்து இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதேபோல் மக்கள் வெளியே வரும்போது முக கவசம் அணிந்திருந்தால் கொரோனா காற்றில் பரவினால் என்ன? அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார்கள்.