Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இமயமலைக்கு ஆசை” இந்தியாவை தொடர்ந்து…. பூட்டானை வம்பிழுக்கும் சீனா….!!

இந்தியாவை தொடர்ந்து பூட்டானிடம் எல்லைப் பிரச்சனையை ஏற்படுத்த சீனா முயல்வதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. இந்த எல்லையில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் தவறு சீனாவின் மீது இருப்பதன் காரணமாக உலக நாடுகளும், இந்திய மக்களும் இந்த சீனாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே கொரோனா பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சீனா அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சமயத்தில்,

இப்போது இந்த பிரச்சனை சீனாவின் மீது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தற்போது அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய பூட்டான் நாட்டிற்கு சொந்தமான கிழக்குப் பகுதியை சீனா தற்போது தங்களுக்கு சொந்தமான இடம் என உரிமை கோரி வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இமயமலையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, சீனா தனது 5விரல் திட்டத்தை பல முயற்சிகள் மூலம் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இது போன்ற எல்லைப் பிரச்சனைகள் பாதிக்கப்படுவதாகவும் பரவலான பல கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Categories

Tech |