தோனி சிறந்த பினிஷர் மட்டுமல்ல எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார் என்று கங்குலி புகழ்ந்து கூறியுள்ளார்
இந்திய அணிக்கு ஒரு சரியான பினிஷர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், நான் இருக்கிறேன் என்று தனது அற்புதமான ஆட்டத்தினால் ஒரு நல்ல பினிஷராகவும் அணிக்கு சிறந்த தலைவராகவும் டோனி மாறினார். இப்போது நாம் தோனியை இந்த அளவுக்கு பாராட்டி மகிழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கங்குலி தான். ஏனென்றால், டோனி முதல் போட்டியில் ரன் எடுக்காமல் நடையைக்கட்டினார். அதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற யோசித்த நிலையில், பாகிஸ்தான் தொடரில் மூன்றாவது வீரராக களமிறங்கி கலக்க வாய்ப்புக் கொடுத்தவர் கங்குலி. அந்த ஆட்டத்தில் டோனி 48 ரன்கள் குவித்தார். அதன்பின் அவர் ஆடிய ஆட்டத்தில எல்லாம் வெற்றியாகத்தான் இருந்தது.
இந்நிலையில் டோனியை அறிமுகம் செய்தது பற்றி பிசிசிஐ நேரலையில் கங்குலியிடம் பேசிய போது, “சிறந்த வீரர்களை சரியாக தேர்ந்தெடுப்பது எனது கடமை. ஒரு தலைவனாக நான் பல விதத்திலும் யோசித்து செயல்பட வேண்டும். சில நேரங்களில் உள்ளுணர்வு தோன்றும் அதனிடம் கேட்டால் நிச்சயம் நல்லதொரு பலன் கிடைக்கும். அதே போல்தான் தோனி விஷயத்திலும் எனக்கு தோன்றியது. தோனி இந்திய அணிக்கு ஒரு மிகச்சிறந்த வீரராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்பி அவருக்கு வாய்ப்பளித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அந்த அளவுக்கு டோனி இன்று உயர்ந்ததை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல பினிஷர் மட்டும் கிடையாது ஒரு சிறந்த வீரரும் தான். ஏனெனில் நான் தலைவராக இருந்தபோது அவரை மூன்றாம் இடத்தில் களமிறக்கி பல போட்டிகளில் சிறப்பாக விளையாட வைத்துள்ளேன் “. என்று புகழாரம் சூட்டியுள்ளார்.