Categories
கிரிக்கெட் விளையாட்டு

117 நாட்களுக்கு பிறகு…. ”தொடங்குகிறது சர்வதேச கிரிக்கெட்” ரசிகர்கள் கொண்டாட்டம் ….!!

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில்  இன்று தொடங்குகிறது.

117 நாட்களுக்குப் பிறகும் தொடங்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இந்திய நேரப்படி 03:30 மணிக்கு தொடங்குகிறது,           கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் சர்வதேச சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

கொரோனா தாக்கத்திற்கு மத்தியில்  நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.களத்தில் வீரர்களும் நடுவர்களும் சமூக இடைவெளியில் பின்பற்ற வேண்டும், வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் கண்ணாடி தொப்பி உள்ளிட்ட உடைமைகளை நடுவரிடம் வழங்கக்கூடாது, வீரர்கள் உடலோடு உரசி மகிழ்ச்சியை  கொண்டாடுவதையும்  குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |