இங்கிலாந்தில் நடக்கும் நார்த் வெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தனித்துவமானது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பற்றி கூறினாலே லார்ட்ஸ் மைதானம் விளையாட்டு அரங்கின் பால்கனியில் நின்று கொண்டு தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிய நிகழ்வுதான் ரசிகர்களின் நினைவிற்கு வரும். பின் நாட்களில் இந்த வெற்றி கொண்டாட்டமே இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாற்று சின்னமாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால் ஐசிசி சார்பாக பேட்டி எடுத்தபோது, கங்குலி 2013 ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டி மற்றும் நார்த் வெஸ்ட் தொடர் போட்டியின் வெற்றி ஆகியவை பற்றி தன் மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டார்.
அப்போது ,இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவது என்பது தனித்துவமானதாகும். அந்த உணர்வை இங்கிலாந்திற்கு பயணிக்கும்போது உணர்வீர்கள் என்று கூறினார். 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளையும் நாங்கள் வெற்றி கொண்டோம்.. உலக கோப்பை இறுதிப் போட்டியின் எங்கள் தோல்வி என்பது மிகச்சிறந்த அணிக்கெதிராக நடந்த நிகழ்வுதான் என்று கூறினார்.