Categories
தேசிய செய்திகள்

3000 போலீஸ் தேடும் உ.பி ரவுடி…! புல்லட் ஃப்ரூஃப் கார்களில் உலா….!!

கடந்த நான்கு நாட்களில் தேசிய அளவிலான ஊடகங்கள் ஒரு ரௌடியை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.

புல்லெட் புரூப் கார்களில் சுற்றி வரும் பயங்கர ரவுடி:

உத்தரப்பிரதேஷத்தில் உள்ள மிகப்பெரிய ரௌடியை பிடிப்பதற்கு 50 போலீஸ் செல்கிறார்கள். அவரை பிடிப்பதற்கு 200 மீட்டர் முன்னாடி செல்லும் போது கரண்ட் ஆப் ஆகுது. அது மட்டுமல்ல,  புல்டவுஸர் ரோட்டில் நின்றது. போலீசார் இதனை  சிந்திக்காமல்,  இது சதியாக இருக்குமா என சிந்திக்காமல்… பிடிக்கவந்த ஆர்வத்தில் இறங்கி புல்டவுசர் எல்லாம் தாண்டி கைது பண்ணிடலாம் என செல்லும் போது  போலீசாருக்கு எதிரான திட்டம் காத்துக் கொண்டிருந்தது. ரவுடி விகாஸ் துபேவின் ஆட்கள்  மேலே இருந்து குறிபார்த்து போலீசாரை நோக்கி சுட்டனர்.

இதில் சுமார் 300 தோட்டாக்கள் போலீசாரின்  உடலை துளைத்து எடுத்திருக்கிறது. 8 போலீசார்  மரணம் அடைந்துள்ளார்கள்,  பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 50 போலீசார் சென்றும், உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என்று திரும்பி விட்டார்கள், அந்த ரவுடி தப்பிவிட்டான். இப்படிப்பட்ட மிகப்பெரிய ரவுடி பற்றி தினம் தினம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

UP POLICE FORMS 25 PLUS TEAMS TO AVENGE DEATH OF ITS 8 OFFICERS ...

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி:

போலீஸ் விசாரணையில் என்ன தெரிய வந்திருக்கிறது என்றால் ? இதில் மின்வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது. சம்மந்த பட்ட ஒரு மின்வாரிய நிலையத்தில் வேலை பார்த்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.  எப்படி இந்த நேரத்துல கரெக்டா கரண்ட் போச்சு ? என்று கேட்கும்போது அவர் எனக்கு உத்தரவு வந்தது என்று கூறினார். இதனால் விசாரணை சூடு பிடித்திருக்கிறது.

இந்த ரவுடி பல அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார், போலீசாரிடமும் தொடர்பில் இருந்துள்ளார்.இவருக்கு நிறைய கார்கள் இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட கார்களில் பயணம் செய்வார் ? என்று விசாரணையில் தெரியவந்து இருக்கின்றது. அரசாங்கத்தில் பல வருடங்கள் பயன்படுத்திட்டு இனிமேல் அரசாங்கத்துக்கு உதவாது என்கின்ற காரை ஏலம் விடுவாங்க…. அந்த ஏலத்திற்கு போய் ஏலம் எடுப்பார். ஏலம் எடுத்த பிறகு அந்த கார்களில் உலா வருவார்.

பல வி.ஐ.பி களை பார்ப்பார், இவர் எடுத்த காரை அரசாங்கத்தில் ஏலம் எடுத்த கார் என சொல்லமாட்டார். அரசாங்கம் கொடுத்த கார் என்று சொல்லி வைத்துள்ளார் என அங்குள்ள பத்திரிகையாளர் தெரிவித்தனர். இதையடுத்து ரவுடி வீட்டை போலீசார் புல்டோவ்சர் கொண்டு இடித்த போது, ரகசிய சுரங்கங்கள் ,  பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Uttar Pradesh Encounter: 8 Cops Shot Dead While Trying To Arrest ...

8 போலீசார் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சி :

போலீசாரை நோக்கி 300 தோட்டாவால் சுட்டவங்க,  சுட்டத்தோடு இல்லாமல் போலீசார் இறந்து விட்டார்களா ? என அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த அருவாளை  கொண்டு போலீசார் தலையை வெட்டியுள்ளார். போலீசாரின் பாதத்தை துண்டாக வெட்டி, உடலை சீதைத்திருக்கிறார்கள் . ரவுடிக்கு ஏன் போலீசார் மீது ஏன் இவ்வளவு வெறி என்று போலீசார் திகைத்து போய் உள்ளார்கள்.

எப்படி 50 போலீசார் புடிக்க வருகிறார்கள் என ரவுடிக்கு தெரிந்தது என்று போலீசார் செல்போன் சிக்னலை வைத்து பார்த்தால் 50 போலீஸ் எந்த காவல்நிலையத்தில் இருந்து செல்கிறார்களோ… அந்த ஸ்டேஷன்ல இருந்த பல பேர் ரவுடி கிட்ட போன்ல பேசி இருக்காங்க. இதனால் நிறைய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, நிறைய பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்த்தவுடன் சுட நடவடிக்கை:

அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போலீஸாரை கொள்ள ரௌடிக்கு சக போலீசார் உதவியுள்ளார் என்பதால் உத்தரபிரதேச மாநிலத்தில் மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அத்தனை செக் போஸ்டிலும் இவர் போட்டோ கொடுத்து கைது நடவடிக்கையை அம்மாநில போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது. குண்டுகள் லோடு  செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். பார்த்தவுடன் சுடுவதற்கு போலீஸ் தயாராகியுள்ளது. இவரை விடக்கூடாது என்று தீவிர நடவடிக்கை உ.பி மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Asianet-Breaking News |Kerala Local News |Kerala Latest News ...

துப்பு கொடுத்தால் சன்மானம்:

இவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 50,000 என்று அரசாங்கம் அறிவித்தது. பிறகு 1 லட்சம் இப்போது 2.5 லட்சம் தருகின்றோம் என உத்தர பிரதேச அரசாங்கம் மக்களிடம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் ஒட்டி அண்டை  மாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதே போல உத்தரபிரதேசம் மாநிலத்தில் எல்லையில் உள்ள நேபால் நாட்டுக்கு எளிதாக தப்பிச் சென்று விடலாம் என்பதால் அங்கேயும் தீவிர ரோந்து நடக்கிறது.

3000 போலீஸ் தேடுதல் வேட்டை:

இவரை பிடிப்பதற்கு 3000 ஆயிரம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் உத்தரப் பிரதேசத்தில் ஈடுபட்டுவருகிறார். இவர் எப்போதும் தனியாக இருக்க மாட்டார். இவரை சுற்றி ஒருக் கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தில் பயங்கர ஆயுதங்கள் இருக்கும். இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கு. ஒரு வழக்கில் கூட தண்டனை கிடைக்கவில்லை. நிறைய வழக்குல அவர் ஜெயிலுக்கு போனாலும், அவரை தண்டிக்க முடியவில்லை. போலீசில் ஆள் வைத்துள்ளார்… பெரிய பெரிய ஆட்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதால் ஒரு மிக பெரிய குற்றவாளியை எப்படி கைது செய்வது ? என தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது உத்தர பிரதேச போலீஸ்

Categories

Tech |