Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வரே…! இது நியாயம் தானா… என்னிடம் ஏன் சொல்லல ? திருமா வேதனை ..!!

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும்,  திமுக தலைமையிலான கூட்டணியும் எலியும், பூனையுமாக தேர்தலை சந்தித்தன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து,  தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோ அல்லது திமுகவோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன்னாள் அதிமுக கண்டு கொள்ளாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த மக்கள் பிரதிநிதிகளையும் ஆளும் அரசு மதிக்கவில்லை என்ற பேச்சு அதிகமாக எழுந்தது. அதனை உறுதி படுத்தும் வகையில் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அரியலூர் மாவட்டத்தில்   மருத்துவக்கல்லூரி அமைக்க நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்க்கு அந்த தொகுதி MP என்ற முறையில் தொல். திருமாவளவனுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை என்று சொல்லப்படுகின்றது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவரும், அந்த தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின்  #மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில் கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |