வெற்றி தோல்வியை அமைதியாக கடக்க வேண்டும். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல வெற்றிகளையும் குவித்து சில தோல்விகளையும் கண்டுள்ளார். வெற்றிகள் வந்தால் அவர் தாம் தூம் என குதித்ததுமில்லை, தோல்விகள் வந்தால் துவண்டுபோய் ஓரமாக அமர்ந்ததுமில்லை. இரண்டிலிருந்தும் அவர் உடனடியாக நகர்ந்து சென்று கொண்டே இருப்பார்.
பலன் எதுவாக இருந்தாலும் முயற்சி அவசியம். கடினமாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயமாக பலன் விரைவில் நாம் நினைத்தபடி கிடைக்கும். தொடக்கத்திலையே முடிவை பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை.
நம்மை நோக்கி வரும் எதிர்மறை கருத்துக்களை நேர்மறையாக மற்ற வேண்டும். தான் என்ன செய்தாலும் குறை கூறுபவர்களை பொருட்படுத்தாமல் தனது திறமையால் தொடர்ந்து முன்னேறி பல கோடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் எம்.எஸ்.தோனியை போல் எதிர்மறையை தவிர்த்து நேர்மறையை நோக்கி பயணிக்க வேண்டும்.