1981- ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாளில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் மகேந்த்ர சிங் தோனி. தனது பள்ளிப்பருவத்தில் கால்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட இவர், பின்னர் தனது பயிற்சியாளர் பேனர் ஜி அறிவுறித்தியதால் கிரிக்கெட்டில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். கால்பந்து ஆட்டத்தை விட்டுவிட்டு கிரிக்கெட்டில் நுழைந்த தோனிக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. TTR-ஆக பணிபுரிந்து பல இன்னல்களை சந்தித்த பின் தனது தீவிர முயற்சியால் படிப்படியாக முன்னேறி மாநில அளவிலான கிரிக்கெட்டிலும் பின்னர் இந்தியா A அணியில் இடம்பெற்றார்.
தனது திறமையை மேலோங்க செய்த தோனியின் அடுத்த இலக்கு சர்வதேச போட்டிகளில் களம் இறங்குவதாக இருந்தது. அதற்கேற்றாற்போல் 2004- ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பங்களாதேஷிற்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் கால் பதித்தார். தோனி முதல் போட்டியே அதிர்ச்சியை ஏற்படுத்தியது ரன் எதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனது அவருக்கு சரிவை ஏற்படுத்தியது. பின்னர் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தோனி 123 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்திய அணியின் கேப்டனான ராகுல் டிராவிட் இருந்து வந்த நிலையில் அவருக்கு பிறகு தோனி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்குவமானா மன ஆற்றலும், எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் குணமும் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியை அவர் வழிநடத்திச் சென்று உலக அளவிலான ரசிகர்களின் மனங்களில் வேறாக இடம் பிடித்தார் டோனி. தனித்துவமான இவரது ஹீலிகாப்டர் ஷாட் மூலம் எதிர் அணி பந்து வீச்சாளர்களை சிதரடித்த டோனி கேப்டனாக பொறுப்பும் வகித்த காலத்தில் 2007- ம் ஆண்டு நடைபெற்ற IICI 20/20 உலகக்கோப்பையும் 2011- ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையும்,
2013- ம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோபியும் பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை தோனியின் சகாப்தத்தில் இடம் பிடித்தவை. கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்த அவர் அணைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து கேப்டன் பதவிகளை ராஜினாமம் செய்தார். கேப்டனாக டோனியின் சகாப்தம் முடித்தாலும் இன்னும் இந்திய அணிக்காக அவர் விளையாடிக்கொண்டு இருக்கிறார். கிரிக்கெட்டின் கடவுளாக வறுனிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்க்கு இணையாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள எம்.எஸ்.தோனி.