மகர ராசி அன்பர்களே …! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகவே இருக்கும். அளவான பணவரவு வந்து சேரும். உணவுபொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பும், ஆசையும் நம்பிக்கை கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதியும் ஏற்படும். எதிர்ப்புகள் அகலும். வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.
பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்ந்து வியாபாரம் சிறப்பை கொடுக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்வதால் சில விஷயங்களில் உங்களுக்கு எதிராக நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதனால் பேசும்பொழுதும் கொஞ்சம் நிதானமாக இருங்கள். காதலர்களுக்கு இன்று நாம் ஓரளவு சிறப்பான நாளாக இருந்தாலும் பேச்சில் நிதானம் கண்டிப்பாக வேண்டும். அதே போல தொழில்முறை போட்டிகளை சமாளிக்க வேண்டி தான் இருக்கும்.
போட்டிகள் ஓரளவு விலகிச் சென்றாலும் கவனமாக இருந்து கொண்டால் அனைத்து விஷயங்களிலும் நன்மையே நடக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.