தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தோனி வீட்டில் இருக்கும் போது தங்களுடைய செல்லப் பிராணிகளான சாரா மற்றும் ஷாம் ஆகிய இரண்டு நாய்களுடன் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருப்பார். இதில் சாரா லேப்ரடார் இனத்தை சேர்ந்தது. சாம் அல்சேஷன் இனத்தை சேர்ந்தது.
தோனி தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அவருக்கு மிகவும் பிடித்த கோவில் ராஞ்சியில் இருக்கும் டியோரி மதி. தோனி தனது குடும்பத்துடன் அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். நாளை இவரது பிறந்தநாள் என்பதால் இந்த கோவிலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தோனியின் மியூசிக் ஆர்வம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். பழைய கிளாசிக் ஹிந்தி படங்களின் பாடல்களை தான் தோனி எப்பவும் கேட்டுக்கொண்டிருப்பார். அதுமட்டுமில்லாமல் பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் பாடல்கள் தான் தோனிக்கு ரொம்ப பிடிக்கும்.
தோனி ஒரு நாண்-வெஜிடேரியன். அவருக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள் இரண்டை சொல்லலாம். ஒன்று சிக்கன், மற்றொன்று ஹாட் சாக்லேட் பட்ச். இது இரண்டு மட்டும் இருந்தால் போதும். அவருக்கு அதுதான் சொர்க்கம்.
தோனி ஒரு பயங்கர WWE பிரியர். அதில் டோனிக்கு மிகவும் பிடித்த மல்யுத்த வீரர்கள் பிரட் தி ஹிட்மேன் ஹார்ட் மற்றும் ஹல்க் ஹகான்.
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோனி தான். டெஸ்ட் மேட்சில் வருடைய கேப்டன்சி வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும், ஒன் டே மேட்சில் அவருடைய கேப்டன்சி வெற்றி வாய்ப்பு 56.19 சதவீதமாகவும் இருக்கும்.
இந்தியாவில் ஷாருக்கானுக்கு அடுத்து அதிகமான விளம்பர பிராண்டுகளை நடிப்பவர் மகேந்திர சிங் தோனி.
தோனியின் பெரும்பாலான கார்களில் நம்பர் 007 தான் இருக்கும். அதனால் ஜெம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தோனியுடைய கார்கள் இருக்கும்னு வச்சுக்கலாம்.