Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…சஞ்சலங்கள் நீங்கும்…சேமிப்பு அதிகரிக்கும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   தங்கள் இஷ்ட தெய்வ அருளால் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பு அதிகரிக்கும். புத்திரர்கள் வேண்டிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று முன்னேற்றங்கள் கூடுதலாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலனையே கொடுக்கும்.

ஆனால் வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் பத்திரமாகச் செல்ல வேண்டும். அதே போலவே இயந்திரங்களைக் கையாளும் பொழுதும், மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பணமிருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை இருக்கும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது பொறுமையாக அவரிடம் வசூல் செய்யுங்கள்.

இன்று காதலர்கள் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்: 9 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |