சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாளையம் பகுதியை தேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு 40 வயதாகிறது. இவர்களின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 30ம் தேதி சேலம் கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரி உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மாள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் தற்கொலையின் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிமைப்படுத்திய மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கு அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அலட்சியப்போக்கு காரணம் என்றும் போதிய கண்காணிப்பு இல்லாததால் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. என்று குற்றம் சாட்டுகிறார்கள்.