தங்கத்தால் முகக்கவசம் செய்து அணிந்த சங்கர் என்பவரை காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் பலரும் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்ல தொடங்கினர். அவ்வகையில் புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர் சற்று வித்தியாசமாக 2 லட்சத்து 89 ஆயிரம் செலவு செய்து தங்கத்தில் முக கவசம் செய்த அணிந்துள்ளார்.
தங்க முகக்கவசத்துடன் இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ஆத்திரம் கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உங்களிடம் அறிவு இருப்பதைவிட பணம் அதிகமாக இருக்கிறது எனவேதான் இப்படி செய்துள்ளீர்கள்” என கோபமாக சாடியுள்ளார். அதோடு தனது பதிவில் சங்கர் தங்க முகக்கவசம் அணிந்திருக்கும் படத்தையும் இணைத்திருந்தார்.
This is what you do when you have more money than sense. https://t.co/YFOQzYSIR6
— Omar Abdullah (@OmarAbdullah) July 4, 2020