Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 54 பேர் பாதிப்பு…. இனி முழு ஊரடங்கா…? அதிர்ச்சியில் குமரி மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டும், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டமும் இணைந்து விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது. அதற்கான காரணம் ஒரே நாளில் கன்னியாகுமரியில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவிவரும் இத்தனை நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 54 ஆக அதிகரித்தது, குமரி மாவட்டத்தில் இதுவே முதன்முறையாகும். இதனால் அங்கே மொத்த பாதிப்பு தற்போது 597 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பாதிப்பை தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |