Categories
ஆன்மிகம் ராசிபலன்

தனுசு ராசியினருக்கு முட்டுக்கட்டைகள் தீரும் …பண வரவு சீராக இருக்கும் ..!!

இன்று மகிழ்ச்சியளிக்கும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள்.பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள். சிக்கனத்தைக் கையாளும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள் .காவல் துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக் கலக்கம் உங்களுக்கு அகலும்.பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும் உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் பணவரவு சீராக இருக்கும்

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும் கல்வியில் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.சமூகத்தில் அக்கறை உங்களுக்கு இருப்பதால் அதனால் செல்வமும் செல்வாக்கும் கூடும் உயர் அதிகாரியிடம் மட்டும் பேசும் போது நிதானமாக இருங்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம்.

இன்று காதலர்களுக்கு  இனிமை காணும் நாளாக இருந்தாலும் பேச்சில் எப்போதுமே கட்டுப்பாடு வேண்டும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது இளம்பச்சை உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |