Categories
சினிமா தமிழ் சினிமா

“மரத்தடி வகுப்பு” கிராமப்புற குழந்தைகள் கல்வி… இருந்த இடத்திலிருந்து அசத்தும் பிரகாஷ்ராஜ்…!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத கிராமப்புற குழந்தைகளுக்கு பிரகாஷ்ராஜ் மரத்தடி வகுப்பு நடத்தி வருகிறார்

தமிழ் திரையுலகில் கில்லி திரைப்படத்தில் செல்லம் ஐ லவ் யூ என்ற வசனத்தின் மூலம் இன்றுவரை பலரது மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர், தனது அறக்கட்டளை மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அவ்வகையில் இப்போது தனது அறக்கட்டளையில் இருக்கும் பணியாளர்கள் மூலமாக கிராமப்புற மாணவர்களுக்கு மரத்தடி வகுப்பு நடத்தி வருகின்றார்.

தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் கிராமப்புற மாணவர்களால் பங்கேற்க இயலாத சூழலும் உள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் வசதியில்லாத மாணவர்களுக்கு தனது அறக்கட்டளை பணியாளர்கள் மூலமாக பிரகாஷ்ராஜ் மரத்தடி வகுப்புகளை நடத்தி வருகின்றார். இதுபற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |