Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா..!!

12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள  தொப்பலாம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொறியாளர், பெங்களூரு சென்று விட்டு திரும்பியவர் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து தருமபுரி நகர பகுதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி 2ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 45 வயது பெண் மற்றும் 22 வயதான பொறியியல் மாணவன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தருமபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி மற்றும் வெளிநாடுகளிலிருந்து தருமபுரி திரும்பிய 2 நபர்கள் என 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |