கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கோபால்.. இவர் சலவைத் தொழிலாளி ஆவார்.. இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.. இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர்.

இது குறித்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.. இதையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட கோபாலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.