ரிஷப ராசி அன்பர்களே …! மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல்கள் வந்துசேரும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலை ஒன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. அப்பொழுதுதான் கருத்து வேற்றுமை வராமல் தடுக்க முடியும்.
பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினருடன் வாக்குவாதத்தை முற்றிலும் தடுத்துவிடும்.வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடுமையாக நீங்கள் பாடுபடுவீர்கள். காரியத்தில் சிறிய தடை தாமதம் இருக்கத்தான் செய்யும் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.