15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய சித்திரவதைக்கு பிறகு இந்த அரசு மருத்துவரிடம் உடல்தகுதி சான்று பெற்ற பிறகு தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் உடல் தகுதி சான்றில் கீழே விழுந்த சிராய்ப்பு மட்டும் உள்ளது என்று மருத்துவர் சான்று அளித்துள்ளார். ஆனால் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரின் பிறப்புறுப்பு மற்றும் புட்டத்தில் காயம் இருப்பது அமபலமாகியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாக ஆன பின்பு அரசு மருத்துவர் 3 நாட்கள் மருத்துவமனைக்கு வரவில்லை. பின்னர் உயர் அதிகாரிகளிடம் சொல்லி விட்டு 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனிடையே இன்று விசாரணைக்கு வர வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் ஆஜராகினார். அவரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.