Categories
தேசிய செய்திகள்

11 நாட்களில் கொரோனாவை வென்ற மூதாட்டி… வயது எத்தனை தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக வயதான பெண்மணியான 105 வயது மூதாட்டி கொரோனாவை வென்று வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமுச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் முரி பாய்.. இவருக்கு வயது 105 ஆகிறது.. அந்த மாநிலத்திலேயே அதிக வயதானாவர் இந்த மூதாட்டி தான்.. இந்தநிலையில் முரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூன் 18ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.. அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டும் வந்தது.

இதையடுத்து கடந்த 29-ஆம் தேதி முரி பாய்க்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதில், தொற்று உறுதிசெய்யப்பட்டு 11 நாட்களிலேயே பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய மூதாட்டியை உற்றார் உறவினர் உற்சாக வரவேற்றனர்..

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 10,199 பேர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வீட்டுக்கு  திரும்பியுள்ளனர்.. மேலும் தற்போது 2,607 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றும், 564 பேர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |