கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
மருத்துவமனைக்கு சென்று விட்டாலே லட்சக்கணக்கில் செலவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறார்.. ஆம், கடந்த 30 ஆண்டுகளாக, தன்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் ரூபாய் 5 மட்டும் வாங்கிக்கொண்டு சிகிச்சையளித்துவருகின்றார் மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சங்கர் கவுடா..
தோல் நிபுணராக இருந்தபோதிலும், கிளினிக்கை தொடங்கிய பின் பொது நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து பெரும் சேவை ஆற்றிவருகின்றார் கவுடா.. கிளினிக்கிற்கு வருபவர்களிடம் அன்பு மற்றும் எளிமையான குணத்தால் அணுகுவதால் அவரை பெரியளவில் நம்பி வருகின்றனர். மாவட்டத்தை தாண்டியும் அவரிடம் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதனால் பிற மாநிலங்களிலும் கவுடா மிகவும் பிரபலமாகிவருகிறார்.