Categories
தேசிய செய்திகள்

129 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரியவகை பாம்பு… வைரலாகும் போட்டோ..!!

அழிந்துவிட்டதாக நினைத்த பாம்பு வகை ஒன்று 129 வருடம் கழித்து கண்டறியப்பட்டுள்ளது

பாம்பு வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் அரிய வகை பாம்பு ஒன்று முற்றிலுமாக அழிந்து விட்டதாக கருதப்பட்டு வந்தது. விஷ தன்மையற்ற அந்தப் பாம்பு 50 முதல் 60 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மையுடையது. 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் என்பவர் முதன் முதலாக இந்த வகை பாம்புகளை சிபிசாகர் மாவட்டத்தில் பார்த்துள்ளார்.

அவர் அந்த பாம்புகளை பிடித்து ஒன்றை லண்டனில் இருக்கும் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்திற்கும்  மற்றொன்றை கொல்கத்தாவில் இருக்கும் விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கும் அனுப்பினார். அதன் பிறகு இந்த அரிய வகை பாம்புகள் யார் கண்களிலும் படவில்லை.

இதனால் இந்தவகை பாம்புகள் அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில் 129 வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக இந்த பாம்பு தேயிலைத் தோட்டத்தை அமைத்தவரால் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் அஸ்ஸாம்-அருணாச்சல பிரதேச எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Categories

Tech |