கொரோனாவுக்கான தடுப்பூசியை யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து WHO தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதால், அதனைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் ஆனது உலகத்தின் பெரும்பகுதி மக்களை தாக்கியதாலும், அதனுடைய பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் தடுப்பூசி கண்டுபிடித்த பின்பும் அதனை அனைவருக்கும் வழங்குவது என்பது சவாலான ஒன்று.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருந்தை வழங்க வேண்டும். பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு எப்போதும் அளிக்கும் மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.