பதவியை விட்டு செல்ல மனமில்லை என்றால் போலீஸ் துறையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்வதோடு மறைக்கத் துணைபோன வர்களையும் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதனோடு சேர்த்து பதிவிட்டுள்ள ட்விட்டில், தமிழக முதலமைச்சர் நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?
காவல்துறைத் தலைமையாக, இருக்கும் முதலமைச்சர் இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்? என்று பதிவிட்டு தமிழக முதல்வருக்கு @CMOTamilNadu டேக் செய்துள்ளார்.
காவல்துறைத் தலைமையாக, இருக்கும் @CMOTamilNadu
இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும்
அதிகாரிகள் மீது
நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?— M.K.Stalin (@mkstalin) June 30, 2020