மேற்கு வங்கத்தில் 1 வருடத்திற்கு இலவச அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் யாரும் பசி பட்டினியால் வாட கூடாது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகிற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என உத்தரவிட்டார். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வருடத்திற்கு அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வரையிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.