Categories
மாநில செய்திகள்

விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க கோரிய திமுக வழக்கு… பதில்தர அவகாசம் கேட்டது தமிழக அரசு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விவரம்

திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தகவல் அளித்திருந்தது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவித்தார். இதனால் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படும் தமிழர்கள் பெங்களூரு மற்றும் ஆந்திர வினைமாநிலயங்களில் தரையிறங்கி தமிழகம் வருவதாக வாதிட்டார்.

தமிழகத்தில் விமானங்களை தரையிறங்க அனுமதி மறுப்பது ஏன்? என தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். திமுக தரப்பில்வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 27,000 பேர் எப்போது அழைத்துவரப்படுவார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படக்கூடிய விமானங்கள் தரையிறங்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் தமிழகத்திற்கு ஏற்கனவே திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளித்தது குறித்த கூடுதல் விவரங்களை அரசிடம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வழங்கவேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மேலும் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதனை கேட்ட நீதிபதிகள் ஜூலை 2ம் தேதி வழக்கை ஒத்திவைத்தனர்.

 

Categories

Tech |