சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார்.
நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என மாஜிஸ்திரேட் தெரிவித்திருந்த நிலையில் வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதையடுத்து வட்டாட்சியர் ஆய்வு நடத்தினார். தற்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.