புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் மற்றும் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 714ஆக அதிகரித்துள்ளது.